நான் எங்கயாவது போனால் வண்டி லையே போய் பழகிடுச்சு, ஊருக்கு எங்கயாவது போனால் மட்டும் தான் Train இல்லாட்டி Bus ல போவேன், மத்தபடி எப்பவுமே என்னுடைய bike தான்.
இப்போ சமீபத்துல Chennai க்கு போக வேண்டிய சூழல், Train ல போயிட்டு வந்தேன், ஏராளமான அனுபவங்களுடன் திருப்பி வந்தேன். நம்ப ஊர் முன்னேறி இருக்கிறது என்பதற்கும் எக்கச்சக்கமான உதாரணங்கள், அதே சமயம் அதற்கு அவ்வளவு கொடூரமான இன்னொரு முகம் என்பதற்கும் ஏராளமான உதாரணங்கள்.
அடுக்கு மாடி கட்டிடங்கள், குடியருப்புகள், சாலைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் எந்த நேரமும் விரைந்து கொண்டு இருக்கும் வாகனங்கள், ஏராளமான மென் பொருள் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஹப்பா சொல்லி கொண்டே போகலாம்... அவ்வளவு முன்னேற்றம்... அதே நேரம்...
அதனுடைய இன்னொரு பகுதி ரொம்ப கொடூரமானது... அடிப்படை வசதி கூட இல்லாத எத்தனையோ குடும்பங்கள், எத்தனையோ மக்கள், நாம் அன்றாடம் வாழ்கையில் தேவை இல்லை என்று தூக்கி எரியும் உணவு பொருட்களாவது கிடைக்குமா என்று என்று ஏங்கி தவிக்கும் மக்கள் கூட்டமும் வளர்ந்து கொண்டே தான் போகிறது என்பது தான் கசப்பான உண்மை.
ரயிலில் என் இருக்கையில் நான் அமர்ந்து இருந்தேன், ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நிற்கும் பொழுது, ஒரு ஐந்து வயது குழந்தை என் அருகில் வந்து,
"அண்ணா ரொம்ப பசிக்குது அண்ணா, சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு அண்ணா, எனக்கு யாருமே இல்ல அண்ணா "
என்று கூறி கை ஏந்தி நிற்கும் பொழுது, என்னிடம் இருக்கும் சில்லறைகளை பொருக்கி தருவதுடன், என் விழி ஓரம் ததும்பி நிற்கும் கண்ணீர் துளிகளை விட வேறு எதுவும் என்னால் செய்ய முடிய வில்லை. நான் மட்டும் இல்லை நூற்றில் தொண்ணூறு சதவிகிதம் பேர் இதை தான் செய்கிறார்கள்.
அனாதைகள் யாவரும்
கடவுளின் குழந்தைகள் என்றால்,
கடவுளுக்கும் வேண்டும்,
குடும்பக் கட்டுப்பாடு.
அருமையான வரிகள், படிப்பதற்கு மட்டும் அல்ல, சிந்திப்பதற்கும். கடவுளை குற்றம் சொல்லி என்ன செய்வது. கடவுள் என்பவரே நாம் உருவாக்கியது தானே... நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுளை குற்றம் சொல்வது எந்த விதத்தில் ஞாயம்.
மனிதன் அவன் செய்யும் சிறு சிறு தவறுகளால், நஷ்டபடுபவர்களை பற்றி யோசிப்பதே இல்லை. உதாரனத்திற்க்கு ரயிலில் விற்கும் உணவுப் பொருட்கள். உயிரினங்கலாகிய நாம் எதிர்பார்ப்பது கொடுக்கும் காசிர்கேற்ற தரமான உணவுகள். ஆனால் நமக்கு ரயில் பயணத்தின் போது கிடைப்பது மிகவும் விலை உயர்ந்த, தரமில்லாத உணவு பொருட்கள். ஒரு பகுதி மக்கள் விலையை பற்றி கவலை படாமல், கிடைக்கும் தரமில்லாத பொருட்களுடன் தங்கள் உடல்களுக்கு தீங்குகளையும் விலை கொடுத்து வாங்கினாலும், இன்னொரு பகுதி மக்கள் சுதாரிப்பாகவே இருக்கிறார்கள். விளைவு, ஒரு பாவமும் அறியாத தொழிலாளர்கள் அந்த தரமில்லாத பொருட்களை கூவி கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆளில்லை. வீணாமல் போகும் தரமில்லாத பொருட்களுக்கு பதிலாக ஞாய விலையில் தரமுள்ள பொருட்களை தயார் செய்தால், மக்களும் விரும்பி வாங்கும் நிலை ஏற்படும், தொழிலாளர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
இன்னொரு விஷயம் கண்டிப்பாக சொல்லி ஆகா வேண்டும். ரயிலில் chair car பெட்டிகளை எதை மனதில் வைத்து கொண்டு உருவாக்கினார்களோ தெரியவில்லை, இரண்டு பேர் உட்கார கூட போதுமான இடமில்லாத இருக்கைகளில் உட்கார வேண்டியது மூவர். குறைந்தது ஐந்தில் இருந்து ஆறு மணி நேரம் பயணம் செய்யும் பயணிகள் கைகளையும், கால்களையும் கூட நகர்த்தாமல் அப்படியே உட்கார்ந்து பயணிப்பார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும் பெட்டிகளை வடிவமைத்தவர்கள்.
ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தால், அந்த ஜன்னலில் கை வைக்கக் கூட அருவெறுப்பாக உள்ளது, அவ்வளவு அழுக்கு.கழிவறைகளை பற்றி சொல்ல தேவையே இல்லை. இன்னொரு பயம், நமது பயணசீட்டில் உள்ள நம்பரில் ஏற்கனவே ஒருத்தர் உட்கார்ந்து இருப்பார், கேட்டால் waiting list என்றும் யாரும் இல்லை என்று அமர்ந்துள்ளேன் என்றும் கூறுவார், சரி சிறிது நேரம் உட்காரட்டும் என்று விட்டு விட்டு கதவின் ஓரம் நின்று காடுகளை வேடிக்கை பார்த்து கொண்டே, "ஹ்ம்ம் இன்னும் சிறிது நேரத்தில் ரயில் நிலையம் வந்து விடும், நம்மை அழைத்துச் செல்ல இந்த வழி தெரியாத ஊரில் யார் காத்து இருகிறார்களோ" என்று ஏங்கி கொண்டே செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம் தான்.
என்ன தான் இருந்தாலும் ரயில் பயணமும் ஒரு தனி அனுபவம் தான்.
